Skip to main content

Kavithaigal

My Lines  ( Feel my lyrics )




விழிகளில் வழிந்திடும் கண்ணீர் துளிகளைவிட !
கலங்கி நிற்கும் விழிகளுக்குத்தான் அன்பு அதிகம் !
இங்கே தான் உணர்வுகளை மறைப்பதாக நினைத்து புதைக்கப்படுகின்றன !


"காதல்

உயிரெழுத்துகள் இல்லாத இந்த சொல்லின் பின்னே ஓர் உயிர் இருக்க காண்பதே காதல்!


காதல் :

காதல் காற்றை போல, அதை நான் சுவாசிக்கும் போது
மட்டுமே வாழ்கிறேன் !
                                                                              

உன் இதயத்தை எளிதாய் கொடுத்து விட்டு உறங்கும் பெண்ணே கனவிலும் விடுவதில்லை உந்தன் நினைவுகள் !

                                                                                  

காதல் கடல் அலை போல, அலைகளில் ஆழம் தெரியாது கடந்து செல்ல செல்ல மீள முடியாது !




தவறுக்கு முன் தட்டி கேட்கும், தவறுக்கு பின் தட்டி கொடுக்கும்
                                                                                       
                                                                                -  நட்பு
   
 
வாழ்வில் தவறவிட்டதை பிடிபதற்கும், தொலைத்ததை திரும்ப பெறுவதற்கும் வேகத்தை செலுத்து! ஆனால் அது வாகனத்தில் அல்ல உன் மனதில்.
                                                                               - உயிர் காப்பேன்


ஒற்றுமைகள் மனதளவில் இருந்தாலும், ஒரு வாயிற்று சோற்றுக்காக சில தடுமாற்றகள். மனித வாழ்வில் இருந்து பிரிந்து சில நொடிகள் வேட்டையாடும் மிருகங்கள் !
                                                                           
                                                                               - சில மனிதர்கள்



இழந்தது ஆயிரம் இருந்தாலும், கிடைக்க போகும் ஒன்றிற்கும் ஆயிரம் தடைகளும் விமர்சனகளும்.
                                                                          
                                                                              - இன்றைய உலகின் பார்வை



மாறிக்கொண்டு இருக்கும் இவ்வுலகில் நம்பிக்கைகளும் நம்மை ஏமாளிகள் ஆக்குகிறது, சென்று கொண்டிருக்கும் நிமிடகள் மட்டுமே நம்மை தீர்மானிகிறது
                                                                                    
                                                                                - தன்னம்பிக்கை கொள்


கண்களை விழித்து கனவு காணாதே, கல் என்று நினைத்து காணமல் சென்று விடுவார்கள். கல் ஆனாலும் கதை சொல்லும் சிற்பமாகு! உலகம் தேடி வந்து உன்னை பார்க்கும்.

                                                                              

மாற்றங்களை மட்டுமே நம்பி வாழும் மனிதர்களுக்குஏமாற்றகளை தருவது பிறர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மட்டுமே !


உன் சுவாசத்திக்காக நான் சுவாசிக்கிறேன் 
பெண்ணே ! உன்னை என் இதயத்தில் வைத்து !


உன்னையும் (ரோஜா பூ ) காதலித்து இருப்பேன், நான் பூக்களாக பிறந்திருந்தால் !
இப்பொது என் காதல் தேவதைக்கு பரிசாய் அளிக்கிறேன் !
என்னை விட நீ காதலை அழகாய் உணர்த்துவாய் என்று !


கிடைப்பது சிறிதானாலும், உழைத்து பழகு வாழ்வில் தோல்விகள் கிடையாது !



பூமியை சுட்டெரிக்கும் சூரியனை விட, பெண்ணே !
என்னை சுட்டெரிக்கும் உன் நினைவுகள் கொடுமையானது !




உன் எதிரியின் உணர்வுகளை கூட அலட்சியப்படுத்ததே !
அவனும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான், ஒருவர் மனதிலாவது !


வாழ்வின் உண்மையான தருணம் தனிமையில் உண்டு !
அதற்கு உன் நினைவுகளை மறந்து விடு, உன்னை நீ முழுமையாக அறிய !!!



மற்றவர்கள் உன் மீது வைத்திருக்கும் அன்பை, நீ உணர்ந்தால் அந்த அன்பிற்கு நீ அடிமை !!!




உன் பாத சுவடுகளை பின் தொடர்ந்து என் வாழ்கை சுவடுகளை இழந்தேன் !
உன் இதயம் என்னும் பாலைவனத்தில் என் கண்ணீர் துளிகள் !!!




கலங்கி நிற்கும் மனதிற்கு ஆறுதல் கண்ணீர் மட்டுமே !
கலகத்திற்கு காரணம் பெண் மட்டுமே !




இதயத்தின் தவிப்பு கண்களுக்கு தான் தெரியும் ! அதை மறக்கும்போது அல்ல, மறைக்கும்போது!




காதலில் எப்போதும்! நினைவுகள் மட்டுமே நிரந்தரம் நிமிடங்கள் அல்ல !!!



உன்னை பின் தொடரும் என் கால்கள் அறிவதில்லை, என் வாழ்க்கை பாதை அழிந்துகொண்டிருப்பதை !!!




கிடைத்த வெற்றியை தக்கவைத்து கொள்ளாதே, அடுத்த வெற்றியை தேடி செல்!
உனக்கு பின் சமுதாயம் காத்துக்கிடக்கிறது அந்த வெற்றிக்காக !!!





காதலில் எப்போதும்! நினைவுகள் மட்டுமே நிரந்தரம் !
நிமிடகள் அல்ல !


நம் கனவுகள் கடற்கரை மணலில் வரைந்த ஓவியம் போல, அலைகளில் அழிந்து விடும் ! சற்று முன்னேறி பாறைகளில் செதுக்கு சாதனைகளாக !


உன் விழிகள் ஒன்றே போதுமடி என்னை சாய்ப்பதர்க்கு, அதில் சாயம் வைத்து
ஜீவனை பிரிக்காதே என் மெய்யிலிருந்து !
       

வாழ்வில் தடை கொண்ட சொற்களை தடயங்கலாக்கு !
உன் வெற்றியின் சிகரத்தில் நின்று கொண்டு.


உன் அருகில் நான் இல்லை, உன்னை விட்டு பிரிவதும் இல்லை. என் மனம் வாடுகிறது உன்னுடைய அந்த கடைசி பார்வையில்!


காதல் என்றும் இனிமை தான், நீ அவளிடம் ரசித்த ஒன்றை தொடர்ந்து காதல் செய்தால்! உன் எதிர்பார்ப்புகள் மாறிபோனால் காதல் என்ற உணர்வும் மாறிப்போகும் அவள் உன் அருகில் இருந்த போதும் !


காற்றிடம் சென்று கேள் பெண்ணே என் இதயம் துடிப்பது சுவாசத்தினால் அல்ல உன் நினைவுகளால் தான் என்று புலம்பும் !
எனக்காக துடிக்கும் என் இதயம் என்னை மறந்து உனக்காக துடிக்க ஆரம்பித்த அந்த  நொடியிலிருந்து புத்தி என்னை காப்பாற்ற உன்னை மட்டுமே தேடுகிறது!
காதல்!!! கண்களை மட்டும் கட்டவில்லை  சிந்தனைகளையும் சேர்த்து முடக்குகிறது.


உன் விழிகள் பேசும் மொழிகளை கூட உன் உதடுகள் பேசுவதில்லை,பேசினாலும் கேட்டிராது என் செவிகள். உன் விழிகளின் முன்னே !

காதல் சொர்கமென்றவர்க்கு மட்டுமே தெரியும் அதன் வலிகள் நரகம் என்று!
வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை,
வலிகள் நமக்கு பல வழிகளைதரும். உன் அருகில் இருக்கும் வெற்றியை விட, உன் இலக்கை நோக்கிய வெற்றிகாக செல்!
கடப்பது தூரமாக இருக்காது உன் அணுபவங்களாகும்!
கிடைப்பது வெறும் வெற்றியாக இன்றி உன் சாதனைகளாகும்!
சாதனை செய் தமிழா :)



உன் விழிகள் ஒன்றே போதுமடி என்னை சாய்பதற்கு அதில் சாயம் வைத்து என் ஜீவனை பிரிக்காதே என் மெய்யிலிருந்து!



தூக்கம் தொலைத்த என் இரவுகளில், சிக்கி தவித்த உன் நினைவுகளால் என்னை நானே மறந்துவிட்டேன் !

சப்தம் இல்லாத இரவில் என் இதயம் உன் பெயராய் துடிக்கக் கேட்கிறேன்!

நீ பேசி சிரித்த நினைவுகள் என் இமைகளிளல் வந்திட என் விழிகள் உறங்குவதில்லை !

குளிர்சியான இரவுகளிலும் உன் நினைவுகள் தீயாகிறதே என்னில் !

கனவிலே நீ வந்தாலும் விடியலுக்காக காத்திருக்கிறேன் உன்னை காணவே!

காரணம் உன் உணர்வுகளை நான் உணர்ந்ததால் !!!




கடந்து செல்ல செல்ல உள்ளம் நெகிழ்கிறது.
கடந்ததை சொல்லும்போது உள்ளம் மகிழ்கிறது.
கடக்கும்போது மட்டுமே உள்ளம் வலிக்கிறது.
நிகழ் காலத்தை இனிமையாக்கு  சந்தோஷம் பின் தொடரும் உன்னை !



என் இதயத்தின் வலிகளுக்கு வார்த்தைகள் உண்டு ஒலி  கிடையாது !

உணர்வுகள் உண்டு அது விழிகளில் தெரியாது !

என் மனதின் கலக்கம் இதழ்களில் தெரிவதில்லை சிரிப்பை தவிர !

விழிகளில் சிந்தும் கண்ணீரும் என் தனிமையில் மட்டுமே !

நம்மை பார்பவரின் மனதை விட, யார் மனமும் புண்படாமல்

நடப்பதே வாழ்வில் சிறந்தது !!!




நீயும் நானும் தான் சமுதாயமென்றால் அதன் சீரழிவிர்க்கும் நாமே காரணம் !
செய்வது தவறானாலும்
சமுதாயத்தில் பத்தோடு பதின்னொறாவதால் அது சரியும் ஆகாது!
உனக்கென ஒரு வழியில் சரியாய் செய்து கொண்டிரு, அது சரியானால் உன் வழியில் காண்போம் பலரை!
நீரிக்கு வேகம் அதிகம் அது காத்து கொண்டிருப்பது வழிக்காக மட்டுமே !
அது நாம் ஆக இருப்போம்!



உன்னை நொடிபோலுதும் ரசிக்கிறேன் ஆனால் நீடிக்க விருப்பம் இல்லை!
என்னை பலமுறை உணர்ந்தேன், உன்னோடு இருக்கும்போது மட்டும் !
வாழ்வின் தெளிவு உன்னிடம் உள்ளது, வேறு இடம் தேவை இல்லை அதனை அறிய!
என் துன்பத்தில் இதம் தந்தாய் நீ, விரக்தியில் மட்டும் விடுவிடதே என்னை!
என் வாழ்க்கையை விளக்கும் வழியாய் உன்னோடு சிறிது தூரம்!
இப்படிக்கு என்னோடு நீ
                                                             - தனிமை.



வாழ்வில் ஓடும் நிமிடகளில் தொலைத்த எண்ணக்களை !
தொலைத்த நிமிடகளில் கிடைக்க பெறுவது இல்லை !
இழப்பதை அறிந்தும் இழக்க மறுக்கும் மனதின் முன்,
எது உண்மையான இழப்பு என அறிய மறுக்கிறது!


இது சுவாசிக்கும் தருணங்கள் அல்ல, நீ சாதிக்கும் தருணம்!
உன் எல்லை இல்லா கனவுகளை திட்டமிட்டு தொடங்கும் தருணம் !
முடிவெடுக்கும் தருணம் எல்லாம் உன் கனவுகளின் எல்லை அல்ல !!!
எண்ணைகள் அறிந்த ஒன்றை, செவிகள் தவறை கேட்கும் !
விழித்திருக்கும் தருணகளில் மொழி தான் உன் பலம் !


நொடிகளில் ஏற்படும் மகிழ்ச்சி அந்த நிமிடத்திற்கு மட்டுமே சொந்தம்!
இதை வைத்து வாழ்வை கணக்கிடாதே ! இவைகள் யாவும்
பின் தொடரும், நம் வாழ்வின் நினைவுகளாய் !





உறக்க சொல்வதை விட தனித்து சொல் ! தண்டனைகள் சில்லறைகள் ஆகும், எண்ணங்கள் வைரங்களாகும் !!!

காதல் கண்கள் போல, பார்க்க பார்க்க அழகாகும் ! நட்பு கண் இமைகள் போல உன்னையே அறியாமல் பாதுகாக்கும் !

வாழ்க்கை வலிகள் நிறைந்தது ! வலிகளை ஏற்று, சந்தோசத்தை விழிகளில் காட்டு வெற்றி உன் கண் முன்னே !!!

கடல் அலைகள் சில நொடிகள் விழிகளில் பாயும்...
- அன்பில் தோற்றால் !




காதல் அலைவரிசை போல கண்ணிற்கு தெரியாது
அந்த இரு இதயகளை தவிர !




வாழ்வில் தடை கொண்ட சொற்களை தடையகளாக மாற்று! உன் வெற்றியின் சிகரத்தில் நின்று கொண்டு !



கண்கள் கவரும் பொருட்கள் அனைத்தும் மரங்களால் ஆனதால் !
மழை நீர் கடலில் விழவில்லை,
அதனால் கடல் கண்ணீர் வடிக்கிறது சுனாமியாக !!!
                              - இயற்கையின் நண்பன்





வாழ்க்கை கடல் போல, அறிவு அதன் ஆழம் போல!
அலைகளில் கிளிஞ்சல்கள் தேடாதே ! ஆழம் சென்று முத்தெடு!
அனுபவம் தான் அறிவை கொடுக்கும் !

 
பணமும், பாசமும் கொடுக்க கொடுக்க தெரியும் !
வலியும், வாய்ப்பும் தேட தேட தெரியும் !
வெற்றியும், புகழும் உழைக்க உழைக்க தெரியும் !
அதேபோல்! சந்தோசமும் நிம்மதியும் பகிரும்போது தான் கிடைக்கும் !


பூக்கள் அனைத்தும் அழகாய் இருப்பது இல்லை,
அழகானவை அனைத்தும் நல்ல மனம் தருவது இல்லை !
நல்ல மனம் தரும் பூக்கள் அனைத்தும் நந்தவனத்தில் இருப்பதில்லை !
விதி செய்யும் செயல்களுக்கு காலம் கை கொடுக்கும் :)


வட்டத்தின் உள் நின்று கொண்டு, சதுரத்தை தேடாதே !
வட்டத்தை உடைத்து சதுரமாக்கு !

 
இதயத்தின் உணர்வுகளை மொழிகளில் காட்டு !
கண்ணே விழிகளில் காட்டாதே !
அதை பார்த்த என் கண்கள் ஆயிரம் ஆயிரம் வழிகளை சொல்கிறது !
என் இதயம் அறியும் முன்பே !



துணிந்து செல் தைரியத்தை மனதில் கொண்டு !
விடாது முயற்சி  செய் தன்னமிகையை புத்தியில் கொண்டு !
உனக்கென்ன ஒரு பாதையில் செல் !
கற்று கொடுக்க சமுதாயம் உள்ளது !
விழும் நொடிகளில் வீழ்ந்தவன் உதவுவான் !
எழும் நொடிகள் தான் உன் அனுபவங்கள் !
சிரித்து கொண்டே முன்னேறு அடுத்ததை கற்க !
- உன்னில் ஒருவன்



வாழ்க்கை ஏதோ ஒரு இலக்கை நோக்கி செல்கிறது !
தொடும் தூரம் உன் இலக்கு இருந்தாலும், கணம் பொழுதில் தொடங்கியது போல் எடுத்துகொள் !
பின் வாழ்வின் சுவாரசியத்தில் இலக்கு என்பது சிறு துளிகள் மட்டுமே !






என் வேதனைகளை பகிரும் சிறந்த நண்பன் தனிமையில் என் பிம்பம் !
அக்கறை தெரியாது கடலில் பயணிக்கும் என் சிந்தனைகள்,
அலைகளில் சற்று ஆறுதல்கொள்ளும் !
ஆழம் அறிய விருப்பம் இல்லை, ஏனெனில் நன் செல்ல நினைப்பது
தூரம் மட்டுமே !
கரை தொடுவதே என் எல்லைகள் அல்ல, அந்த கரைகளில்
பாலைவனமா அல்ல நந்தவனமா என்ற குழப்பமும் அல்ல !
கடந்து வந்தவைகள் என் சாதனைகள் அல்ல, இந்த பயணத்தின்
எல்லை என் லட்சியமும் அல்ல !
நிகழ்காலத்தில் தோன்றி மறையும் என் சவால்களுக்கு,
நன் பெற்று கொண்டிருக்கும் அனுபவத்தில் உன்னுடன் ஒரு பகிர்வு !


- தனிமையில் நான் ( என்னுடன் என் பிம்பம் )

Comments

Popular posts from this blog